×

நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் : விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை :தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

25-ந் தேதியன்று (இன்று) பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,Vijayakanth ,Almighty God ,birthday , I pray to Almighty God to live long and continue to serve the people: Happy Birthday to Chief Minister Palanisamy for Vijayakanth !!
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!