×

நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு மாணவி தற்கொலை : இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்ய கனிமொழி வலியுறுத்தல்!!

சென்னை : இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியருக்கு சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்ததுள்ளார். அண்மையில் செப்டம்பர் மாதம் நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே கடந்த முறை தோல்வி அடைந்ததால் அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா, என்பதில் சுபஸ்ரீ குழப்பத்தில் இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவர் கனவோடு இருந்த மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Tags : student ,suicide ,Kanimozhi , NEED EXAMINATION, DESTRUCTION, STUDENT, SUCCESS, KANIJOLY, INSTRUCTION
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...