×

சென்ைன காவல் துறையில் 40 இன்ஸ்ெபக்டர்கள் மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை, ஜூன் 14: சென்னை பெருநகர காவல்துறையில் 40 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது தேர்தல் நடத்தை நடைமுறை அமலுக்கு வந்ததால், சென்னை பெருநகர், தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் பெரும்பாலான பணியிடங்களில் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படாமல் காலியாவும், பணியிடம் மாற்றம் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கிக் கொண்டதால், சென்னை பெருநகர், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரத்தில் 40 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை பெருநகர காவல்துறையில் ஐபிசி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, திருவிக நகர், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையம், தரமணி, நொளம்பூர், ஜே.ஜே.நகர், சாஸ்திரிநகர், வேளச்சேரி, திருவொற்றியூர் குற்றப்பிரிவு, பேசின் பிரிட்ஜ், வில்லிவாக்கம், அண்ணாசதுக்கம் என 18 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களில் 10 பேர், ஆவடி மாநகர காவல்துறைக்கும், 8 பேர் தாம்பரம் மாநகர காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆவடி மாநகர காவல்துறையில் பணியாற்றிய 11 இன்ஸ்பெக்டர்களில் 10 பேர் சென்னை பெருநகர காவல்துறைக்கும், ஒருவர் தாம்பரம் மாநகர காவல்துறைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல்துறையில் பணியாற்றிய 11 இன்ஸ்பெக்டர்களில் 9 பேர் சென்னை பெருநகர காவல்துறைக்கும், 2 பேர் ஆவடி மாநகர காவல்துறைக்கும் என மொத்தம் 40 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்ைன காவல் துறையில் 40 இன்ஸ்ெபக்டர்கள் மாற்றம்: கமிஷனர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Police Department ,Chennai ,Sandeep Roy Rathore ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்