×

சிறப்பாக பணியற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் அறிவிப்பு :சுதந்திர தினத்தன்று தங்கப் பதக்கம், ரூ. 25,000 பரிசும் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்!!

சென்னை: சென்னை சுகந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றி 10 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய மேலும் 5 காவல் அதிகாரிகளுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்:

1.     திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில் நுட்பப் பணிகள், சென்னை, முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்.     
2.     திரு.கி.சங்கர்,  இ.கா.ப.,  காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு  குற்றப்புலனாய்வுத் துறை,   சென்னை.     
3.     திரு ச.சரவணன்,  காவல் துணைஆணையர்,  சட்டம்  மற்றும் ஒழுங்கு,    திருநெல்வேலி மாநகரம்.     
4.     மருத்துவர் (திருமதி) ச.தீபா கணிகர்,  இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர்,  சேலம் மாவட்டம்.      
5.     திரு.ப்பி.ஜெகன்நாத்,   தலைமை காவலர் 19917, வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு,  சென்னை  பெருநகர காவல்,   சென்னை மாநகரம்.      

    இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல் துறை   அதிகாரிகளுக்கு   2020 ம்  ஆண்டு  சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை வழங்கிட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்:   

1.     திருமதி ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு,  சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.     
2.     திரு இரா.குமரேசன், காவல் துணை கண்காணிப்பாளர், கியூ பிரிவு  குற்றப்புலனாய்வுத் துறை,   சென்னை.     
3.     திரு தி.சரவணன், காவல் உதவி ஆணையர், வடக்கு சரகம்(குற்றம்),  சேலம் மாநகரம்.     
4.     திரு எஸ்.கே.துரை பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், காட்பாடி உட்கோட்டம்,   வேலூர் மாவட்டம்.    
5.     திரு ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், காவல் ஆய்வாளர், ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு  குற்றப் புலனாய்வுத் துறை,   திருச்சி மாநகரம்.     
6.                                       திருமதி பி.எஸ்.சித்ரா, காவல் ஆய்வாளர், மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் ,   திருச்சி மாநகரம்.     
7.     திருமதி கா. நீலாதேவி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், சிவகங்கை  மாவட்டம்.     
8.     திருமதி ச.பச்சையம்மாள், காவல் ஆய்வாளர், அரக்கோணம்  இருப்புப்பாதை காவல் நிலையம்,   இருப்புப்பாதை காவல் சென்னை.     

 9.        திருமதி ப.உலகராணி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, திருநெல்வேலி.     
10.     திருமதி பி.விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி.    

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய  தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில்  வழங்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : police officers ,Medal announcement ,Palanisamy ,Independence Day , Medal announcement for 15 best performing police officers: Gold medal on Independence Day, Rs. Chief Minister Palanisamy presents 25,000 prizes !!
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...