×

சாம்பியன் ஜுவென்டஸ் அதிர்ச்சி தோல்வி

ரோம்: இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டியின் சாம்பியனாகி விட்ட ஜுவென்டஸ் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் அசத்தலாகவெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த போட்டியில் காக்லியாரி அணியிடம் 0-2 என்றகோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது. இந்த தோல்வி காரணமாக ஜூவென்டஸ் அணி சாம்பியன் பட்டத்திற்கும், கோப்பைக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சிதான். ஜூவென்டஸ் அணி தனது கடைசிப் போட்டியில் ஞாயிறு அதிகாலை ரோமா அணியுடன் மோத உள்ளது.

Tags : Champion ,shock defeat ,Juventus , Champion Juventus, shock defeat
× RELATED சாம்பியன் இத்தாலி சாகசம்