×

சிங்கிளா பண்ணா வேலைக்காவாது... இனி கொத்து கொத்தாக அமெரிக்காவில் சோதனை

வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தும் விதமாக, இனி தனித்தனியாக சோதனை செய்வதற்கு பதிலாக தொகுப்பாக கொத்து கொத்தாக சோதனை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) அனுமதி தந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், அங்கு பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, தொகுப்பு முறையில் சோதனை மேற்கொள்ளும் நடைமுறைக்கு எப்டிஏ முதல் முறையாக அனுமதி தந்துள்ளது.

இதன்படி, ஆய்வகங்களில் தனித்தனியாக கொரோனா சோதனை செய்யப்படாது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் மாதிரிகளை ஒரே நேரத்தில் சேர்த்து சோதிப்பதே தொகுப்பு சோதனை ஆகும். இதில் நெகட்டிவ் வந்தால் யாருக்கும் பாதிப்பில்லை என அர்த்தம். பாசிட்டிவ் வரும் பட்சத்தில் தனித்தனியாக மாதிரிகள் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் ஆய்வக செலவுகள் குறையும். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘‘தொகுப்பு பரிசோதனையால் நேரம் மிச்சம் ஆகாது. மேலும் இந்த நடைமுறை 10%க்கும் குறைவான பாதிப்புள்ள பகுதிகளில் மட்டுமே பலன் அளிக்கும். குறைவான பாதிப்புள்ள பகுதியில் இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம்’’ என கூறுகின்றனர்.

Tags : US ,cluster testing , Single panna, not working, no more clusters, USA, test
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...