உத்திரபிரதேசத்தில் சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை: கொரோனா மருந்து என மதுவை கொடுத்து கொடூரம்..போலி சாமியார் கைது!!!

லக்னோ: ஆசிரமத்தில் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்திய போலி சாமியார், அவரது உதவியாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரமத்தில் நடந்த கொடுமைகளை சிறுவர்கள் கண்ணீர் மல்க விவரித்தது கேட்போரை பதைபதைக்க வைத்தது. முசாஃபர் நகர் அருகே 12 ஆண்டுகளாக செயல்படும் ஆசிரமம், எதிர்கால கல்வியை மனதில் வைத்து குழந்தைகளை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்த பெற்றோர், பெற்றோரின் நம்பிக்கையை பொய்யாக்கிய சாமியார் பக்தி பூஷன் தம்மை மஹராஜ் என்று அறிவித்துக்கொள்கிறார்.

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் ஆசிரமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி முடிந்தாலே பயம் தொத்திக் கொள்கிறது. கொரோனா மருந்து என்று கூறி மதுபானத்தை சிறுவர்களுக்கு கொடுக்கிறார். உடனே சாமியார் நிர்வாண கோலத்தில் ஆபாச படங்களை காட்டி சிறுவர்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகிறார். இதை கேட்காத சிறுவர்களுக்கு அடி, உதை என சித்ரவதை மீள்கிறது. இத்தனை கொடுமைகளுக்கும் இடையேயும் ஆசிரமத்தில் இருந்து தப்பிய சிறுவனின் தகவல் மூலமே கொடூரங்கள் அம்பலத்திற்கு வந்தன.

இதையடுத்து குழந்தைகள் நல குழு கொடுத்த புகாரின் அடிப்படையில் சாமியார் பக்தி பூஷனும், உதவியாளர் மோஹன்தாசும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்த சிறுவர்களை மீட்ட போலீசார் அவர்களை அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இதையடுத்து அசாம், திரிபுரா சிறுவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதில் வேதனை என்னவென்றால் குழந்தைகள் இருந்த ஆசிரமம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்பது தான்.

Related Stories: