×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயமபத்தூர், நீலகிரி, தேனீ, திண்டுக்கல், ஈரோடு, புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமஹேயும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்கள் மட்டும் கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மெகா மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, அகரம் சீகூர், வல்லம் பகுதிகளில் தல 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், செஞ்சியில் 11 செ.மீ.  மழையும், வீரகனூர், பொண்ணை அணை, ஆரணி, கீழச்சேருவை பகுதிகளில் தல 7 செ.மீ.  மழை பதிவாகியுள்ளது. மேலும், சோளிங்கரில் 6 செ.மீ. மழையும், விருதாசலம், பெனுகொண்டாபுரம் பகுதிகளில் தல 5 செ.மீ. மழையும், திருத்தணி, தர்மபுரி பகுதிகளில் தல 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூன் 29ம்(இன்று) தென்கிழக்கு, வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி கற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த கற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை தென்மேற்கு மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், ஜூலை 3ம் தேதி மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Tamil Nadu ,Chennai Meteorological Center Thunderstorms ,Chennai Meteorological Center , Tamil Nadu, Rain, Chennai weather forecast
× RELATED ஆழ்ந்த காற்றழுத்தம் நீடிப்பு இன்று...