×

ரயில் நிலையங்களில் இனி வாங்கலாம்: மாஸ்க்... மாஸ்க்கே கிளவ்ஸ்... கிளவ்ஸ்சே

புதுடெல்லி: ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளில் முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையக் கடைகளில் பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட், நாளிதழ், வார இதழ்கள், புத்தகங்கள் வி்ற்பது வழக்கமாகும். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால், வைரசைத் தடுப்பதற்கான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும்படி ஒப்பந்ததாரர்தகளுக்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:பயண அவசரத்தில் பயணிகள் சில வேளை முகக்கவசம், கையுறை போன்ற கொரோனா தடுப்பு பொருட்களை வீட்டிலேயே விட்டு வர வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் தேவைகளை அறிந்து கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை அதிகபட்ச சில்லரை விலைக்கு விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தொற்று காரணமாக ரயில்வே நிர்வாகம் படுக்கை விரிப்புகள் தருவதை நிறுத்தி விட்டதால், படுக்கை விரிப்பு, தலையணை, தலையணை உறை, கம்பளி, டவல் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. பயணிகள் இவற்றை `பெட் கிட்’ என மொத்தமாகவோ அல்லது தனித்தனி பொருட்களாகவோ வாங்கி கொள்ளலாம். இவை தரமானதாகவும் அதிக லாபம் இல்லாமலும் விற்கப்பட உள்ளது. ரயில்வே தயாரிக்கும் பொருட்களைத் தான் விற்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு எந்த நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. கடந்தவாரம் இது தொடர்பான உத்தரவு கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : Railway Stations ,train stations , You , more ,train stations
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...