×

அண்ணாநகர் மருத்துவமனையில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மரணம்

 அண்ணாநகர்: அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய்தொற்று சிகிச்சை பலனின்றி முன்னாள் வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் பலராமன் இன்று அதிகாலை பரிதாபமாக மரணமடைந்தார். சென்னை அண்ணாநகர், 13-வது மெயின் ரொடு, சாந்தி காலனியை சேர்ந்தவர் உ.பலராமன் (77). இவர், சுமார் 25 ஆண்டுகளாக வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா நோய்தொற்று உறுதியானது. அதே மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் பலராமனுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிகிச்சை பலனின்றி பலராமன் பரிதாபமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் அவரது உடலை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாக்கம் சுடுகாட்டில் உறவினர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் அடக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் கூறப்படுகிறது.

Tags : Balaraman ,Anna Nagar ,DMK ,hospital , Former DMK ,secretary Balaraman, dies, Anna Nagar hospital
× RELATED கணவனை அடித்துக்கொன்று விபத்து...