×

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

சென்னை: சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர் ஒருவர் சென்னை நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. அதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.19% பேர் ஆண்கள், 39.80% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 31 வரை ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Chennai ,IOC , Welfare, Icord ,strict , curfew, amid ,coronavirus ,Chennai
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்