×

110 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது நிசர்கா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பை: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் இது புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.

புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெற உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் நிசர்கா என்று அழைக்கப்படும். வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் நிகர்சா என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Hurricane Nisarga Storm ,coast ,Maharashtra ,Indian Meteorological Department Maharashtra: Indian Meteorological Department , 110 km Speed, Maharashtra, crossing shore, Nisarga storm, Indian Meteorological Center
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...