×

சமூக வலைதளங்களில் உள்ள 100 தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்: மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு கருத்துக்களையும், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் தினமும் பல ஆயிரம் பேர் பகிரந்து வருகின்றனர். இந்நிலையில், சில பயனர்கள் சமூக ஊடகங்களை தவறாக பன்படுத்துவதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்பட்டு உள்ள 100 தவறான தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என பல்வேறு சமூக வலைதளங்களை நேற்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.இது தொடர்பாக டிவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிர்வாகங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘சமூக வலைதளங்களில் பலர் கொரோனா தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது மக்களிடையே தேவையற்றற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்பட்ட 100 பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளது. …

The post சமூக வலைதளங்களில் உள்ள 100 தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்: மத்திய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Central Govt ,New Delhi ,central government ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி