×

டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் மது விற்பனை செய்த விவகாரம் உளவு பிரிவு தலைமை காவலர் உட்பட 2 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

* போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை

சென்னை: டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில், போலீசார் துணையுடன் 10ம் தேதி டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் கள்ளச்சந்தையில் சிலர் மது விற்பனை செய்தனர். ரோந்து சென்ற தலைமை காவலர் வெங்கட்ராவ் மது விற்றவர்களை பிடிக்க முயன்றார். அவரை, உளவு பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன் கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதல் சம்பவம் அனைத்தும் குடியிருப்பில் உள்ள பெண்கள் வீடியோ எடுத்தனர்.  பின்னர் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.   இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த தலைமை காவலர் வெங்கட்ராவ் மற்றும்  உளவு பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்படி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி உயர் அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். அதில்  சட்டத்தை பாதுகாக்க வேண்டிய இருவரும் பொது இடங்களில் அநாகரீகமான முறையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் கமிஷனர் உத்தரவுப்படி மதுவிற்பனை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் உளவு பிரிவு காவலரை தாக்கியதாக  தலைமை காவலர் வெங்கட்ராவையும், பணியில் இருந்த அரசு அதிகாரியை தாக்கியதாக உளவு பிரிவு தலைமை காவலர் கார்த்திகேயனையும் அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.



Tags : police action ,DP Chatram ,DP Chatram Police Apartment ,Alcohol Selling , DP Chair Quarters, Liquor Sales, Chief Guard, 2 Policemen, Suspend
× RELATED திருப்பதி மாவட்டத்தில் போலீசார்...