×

4 ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா பாதிப்பு: மந்தைவெளி ரயில் நிலையத்திற்கு சீல்: அதிர்ச்சியில் அதிகாரிகள்

சென்னை: ரயில்நிலையத்தில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த 4 ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மந்ைதவெளி ரயில் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் தங்குவதற்கு சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அங்கு 45 ஆயுதப்படை போலீசார் தங்கியிருந்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அங்கு தங்கியிருந்த 25 வயதான ஆயுதப்படை போலீசார் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைத்து ஆயுதப்படை போலீசாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாம்பலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மந்தைவெளி ரயில் நிலையம்  முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.


Tags : Corona ,Mandalay Railway Station ,Armed Forces , 4 Armed Police, Corona, Mandalay Railway Station, Seal
× RELATED சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை