×

சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

திண்டுக்கல்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் திண்டுக்கல் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே கன்னிவாடி, மேற்கு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். மனைவி, மகன் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வினோத்குமார் கன்னிவாடிக்கு வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினோத்குமார் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னையால் வினோத்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai Armed Forces Policeman ,Dindigul ,Chennai Armed Forces ,Vinod Kumar ,West Street, Kanniwadi ,Reddyarchatram, Dindigul District ,Armed Forces ,Chennai ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு