×

தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது

சென்னை, ஜூன் 23: கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தமிழகம் முழுவதும் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இருப்பினும், தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜவினர் திரண்டனர். தொடர்ந்து மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயண திருப்பதி, மாநில செயலாளர்கள் எஸ்.சதீஷ்குமார், சுமதி வெங்கடேசன் ஆகியோர் பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து, வள்ளுவர் கோட்டம் நோக்கி, பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

The post தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,State president ,Annamalai ,Tamil Nadu BJP ,Kallakurichi ,Tamil Nadu ,
× RELATED சுயலாபம், அதிகார வெறிபிடித்த...