×

மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி சடலமாக மீட்பு

 

பூந்தமல்லி, ஜூன் 24: மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர், வானகரம் மீன் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சரண்ராஜ் கிடைக்கவில்லை.

இதனிடையே, சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சரண்ராஜ் சடலமாக கிடந்தார். மதுரவாயல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சரண்ராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து சரண்ராஜ் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து வீசினார்களா என விசாரிக்கின்றனர்.

The post மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Charanraj ,Perumal Koil Street, Maduravayal ,Vanakaram ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் பரபரப்பு அடுத்தடுத்து 4...