×

கோல்டன் குளோப் விருதுக்கு விதிமுறைகள் தளர்வு

கொரோனா வைரஸ் பரவல் திரையுலகத்தையே அசைத்துப் போட்டிருக்கிறது. படத் தயாரிப்பிலும், வெளியீட்டிலும் பல மாறுதல்களை கொண்டு வர இருக்கிறது. அதற்கேற்ப உலகபுகழ்பெற்ற விருது தேர்விலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.  ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய திரைப்பட விருது கோல்டன் குளோப் விருது. இந்த விருதிலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி விருதுக்கு வரும் படங்கள் அந்தப் படம் தயாரிக்கப்படும் நாட்டில் தியேட்டர்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

தற்போது நடைபெற இருக்கிற 93வது கோல்டன் குளோப் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் உலகின் எந்த நாட்டிலும், எந்த வடிவிலும் வெளியிடப்பட்டிருக்கலாம். இணையதளம், தொலைக்காட்சி, கேபிள் தொலைக்காட்சியும் இவற்றில் அடங்கும். அதேபோல தேர்வு குழுவிற்கு படத்தை திரையிட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. படத்தின் டிவிடியை அனுப்பிவைக்கலாம். அல்லது நடுவர் குழு ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் ஒரே தளத்தில் கிடைக்கும் படத்தின் லிங்கை அனுப்பி வைக்கலாம். கோல்டன் குளோப் விருது விழா நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags : Golden Globe Award, Terms relaxed
× RELATED தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்...