×

டெல்லியில் பசி, பட்டினியால் தமிழர்கள் பரிதவிப்பு: ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லை என்று கண்ணீர்

டெல்லி: கொரோனா ஊரடங்கு டெல்லியில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. குறிப்பாகா லஜ்மத் நகரில் உள்ள ஜல்திகார் என்ற இடத்தில் குடிசையில் வாழும் தமிழர்கள் ஒருவேளை  உணவுக்கு கூட வழியில்லாமல் பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசு தங்களை கைவிட்டுவிட்டதாக அவர்கள் கண்ணீர் விடுகின்றனர். தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் சுமார் 3 லட்சம் பேர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிசை மற்றும் சிறு சிறு அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் வேலை என்பது பெண்களை பொறுத்தவரையில் வீட்டு வேலையும் ஆண்கள் தினசரி கூலி வேலையும் செய்து வருகின்றனர். டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பொறுத்தவரையில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லி அரசை பொறுத்தவரையில் இவர்களை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசும் இவர்களை கண்டுகொள்ளவில்லை.

தமிழக அரசை பொறுத்தவரையில் இவர்கள் டெல்லி வாழ் தமிழர்கள் தானே என்று இவர்களை கண்டுகொள்ளாத ஒரு நிலை தான் இருந்து வருகிறது. எனவே உடனடியாக மூன்றில் ஏதாவது ஒரு அரசு நடவடிக்கை எடுத்து இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்து வருகிறது.


Tags : Delhi , Delhi, hunger, hunger
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...