×

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கடந்த ஆண்டு சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து கூண்டுகள் வைத்து 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டது. இதில் 3 சிறுத்தைகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறுமியை கொன்ற சிறுத்தை மீண்டும் மனிதர்களை தாக்கும் என்பதால், பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை சாலையில் ஒரு சிறுத்தை நேற்று நடமாடியுள்ளது. அதிகாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து பக்தர்களை அனுப்பி வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Thirumalai ,Tirupathi Highways ,
× RELATED திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு...