×

ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். மேலும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார். விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது எனவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் எனவும் கூறினார். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறால் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக சாலையில் மக்கள் கும்பல் கும்பலாக மயங்கி விழுந்தனர். இந்த விஷவாயு தாக்குதல் சுமார் 3 கீமீ தெலைவு வரை பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் விஷவாயுவை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகனிடம் கேட்டறிந்தார். 


Tags : Ramnath Govind ,Andhra Pradesh , President Ramnath Govind ,condoles , family , Andhra Pradesh
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...