×

வங்கிகளில் வாங்கிய கடனுக்கான EMI 3 மாதத்திற்கு தள்ளிவைப்பு: கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலையை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அதிரடி


டெல்லி : கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அனைத்து கடன்களின் தவணைகளும் 3 மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் கவனித்து வருகிறோம் ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும் . அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்புஎன்று தெரிவித்தார். இதனால் வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவித்தவை பின்வருமாறு,

*வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் குறைப்பு. 5.15% ஆக இருந்த ரெப்போ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.40% ஆக நிர்ணயம்.

*ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைப்பு

*வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு

*வங்கி டெபாசிட்டுகளுக்கும் ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கவே கடன் வழங்கப்பட்டுள்ளது.

*உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு என கணிக்கப்பட்டுள்ளது.

*நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது.இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதமும் எதிர்பார்த்ததை விட ககுறையும்.

*கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிப்பதை பொருத்து நிதித்துறையில் நிச்சயமற்ற நிலை தொடரும். பொருள் விநோயக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*பொருட்கள் வாங்குவதற்கான தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும்.

*விளைச்சல் அமோகமாக உள்ளதால் வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

*நிதி நிலையில் உறுதிப்பாட்டை பராமரிப்பதே ரிசர்வ் வங்கிக்கு முன் உள்ள பெரும் சவாலாக உள்ளது.

*ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் 150 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். கொரோனா பாதிப்புக்கு பின் வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமான மிகப்பெரும் பணியாகும்.

*கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க 4 அம்ச திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

1. சந்தையில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வது.

2.வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு.

3.கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைப்பது.

4.சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை.

*கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு; இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது.

Tags : Reserve Bank Action ,EMI ,banks ,Corona Half , EMI deferred for 3-months to borrow from banks: Reserve Bank Action
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்