×
Saravana Stores

கோயம்பேட்டில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 50 பேர் மீட்பு : காப்பகத்தில் ஒப்படைப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 50 பேர் மீட்கப்பட்டு, மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன்காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இந்நிலையில் நேற்று காலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து குறைந்தளவு அரசு பஸ்களே வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் ஆய்வுசெய்தனர். அப்போது ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு வேண்டிய உடை, உணவுகளை வாங்கினர். பின்னர் அவர்களை காவல்துறை வாகனங்கள் மூலம் அழைத்து சென்று, சென்னை மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Rescue 50 Orphans of Rescue ,Coimbatore , Goombad, Orphans, Archive, Corona Virus
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...