- ராயபுரம்
- தண்டாயர்பேட்டை
- புவனேஷ் குமார்
- 4 வது தெரு
- புது காமராஜ் நகர், ராயபுரம்
- தமிழ்
- நாடு வெற்றி கழகம்
- விஜய்
- 2ம் தெரு
- Kamarajarnagar
தண்டையார்பேட்டை: ராயபுரம் புது காமராஜர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் புவனேஷ் குமார் (29), ஆட்டோ டிரைவர். இவர் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 2வது தெருவில் விஜய் மாநாட்டு பேனர் வைத்திருந்தார். மேலும் இவருடைய ஆட்டோவில் மாநாடு குறித்து பேனர் இருந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (29). இவரும், தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்.
இவருடைய நண்பர்கள் நவீன், மோகன் ஆகியோர் அந்த வழியாக வந்த புவனேஷ் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரபாகரன், பிரகாஷ் ஆகியோரை மடக்கி எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி பேனர் வைத்தீர்கள் என்று கேட்டு சண்டை போட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கட்டை, கையால் தாக்கிக்கொண்டனர். அதில் படுகாயமடைந்த புவனேஷ் குமார் மற்றும் கோகுல்நாத் ஆகியோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post ராயபுரம் பகுதியில் தவெக பேனர் வைப்பதில் இரு தரப்பினர் மோதல்: இருவர் படுகாயம் appeared first on Dinakaran.