×

கொரோனா உட்பட இந்தியா சந்திக்கும் 3 கடும் நெருக்கடிகள்: மன்மோகன் சிங் கவலை

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பத்திரிகை ஒன்றுக்கு  ‘கனத்த இதயத்துடன் நான் எழுதுகிறேன்’ என்ற கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமுதாயச் சீர்குலைவு, பொருளாதார மந்த நிலை, உலக ஆரோக்கியத்துக்கு எதிரான கொரோனா வைரஸ் ஆகிய முப்பெரும் பாதிப்புகளால் இந்தியா பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகிறது. சமூக அமைதியின்மை, பொருளாதார மந்த நிலை சுயமாக ஏற்படுத்திக் கொண்ட கொரோனா தாக்குதல்.  இந்த சக்திகளின் கூட்டு இந்தியாவின் ஆன்மாவையே பிளவுபடுத்துவதோடு, உலகின் பொருளாதார மதிப்பியல்களிலிருந்தும் நாட்டை சரிவுக்குள்ளாக்கியுள்ளது.

வகுப்புவாத பதற்றங்கள் உருவாக்கப்பட்டு நம் அரசியல் வர்க்கம் உட்பட சமூக விரோத சக்திகள் கொழுந்து விட்டு எரியச் செய்த மதச்சகிப்பின்மை நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் இருண்ட நாட்களை இது நினைவூட்டுவதாக அமைந்தது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிறுவனங்கள் குடிமக்களை காக்க வேண்டிய தர்மத்தினைக் கடைபிடிக்கவில்லை.  எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் சமூகப்பதற்றம் நாடு முழுதும் வேகமாகப் பரவி நம் தேசத்தின் ஆன்மாவை தீக்கிரையாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீயை மூட்டியவர்கள்தான் அதை அணைக்க முடியும். நாட்டின் தற்போதைய வன்முறைக்கு இந்திய வரலாற்றின் கடந்தகால சம்பவங்களை, சந்தர்ப்பங்களைச் சுட்டி நியாயப்படுத்துவது  அறிவுக்கு விரோதமானது.   இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags : Corona ,crises ,India ,Manmohan Singh , Manmohan Singh , 3 major crises , India ,Corona
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!