×

கோயம்பேடு தொழிலாளி கொலையில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

அண்ணாநகர்: கோயம்பேடு தொழிலாளி கொலையில் முக்கிய குற்றுவாளி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் ஜெய்குமார் (24). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (44). இவர்கள் இருவரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து, கஞ்சா அடிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் ஜெய்குமார் தனது தாய் செல்போன் எண்ணை சேகரிடம் கொடுத்து, ‘‘உனக்கு கஞ்சா வேண்டுமென்றால், இந்த எண்ணில் கூப்பிடு. கொண்டு வந்து தருகிறேன்,’’ என கூறியுள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்ட சேகர், ஜெயக்குமாரின் தாயாரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெயக்குமார், சேகரை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி ஜெய்குமார், தனது மற்ெறாரு நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ், கூவம் நதி அருகே கஞ்சா அடித்துள்ளார்.

அப்போது, சேகரை செல்போனில் தொடர்புகொண்டு அங்கு வரவழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த சேகர், இவர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்துள்ளார். போதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெய்குமார், கார்த்திக்குடன் சேர்ந்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, சேகர் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராமல் சேகர் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய ஜெய்குமார், கார்த்திக் ஆகியோரை தேடி வந்தனர். இதில், தலைமறைவாக இருந்த ஜெய்குமாரை போலீசார் மறுநாள் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கார்த்திக், சென்னை உயர் நீதிமன்ற 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.
பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.



Tags : Charan ,murder ,Coimbatore ,court ,Chairperson , Coimbatore, Worker Murder, Offender, Court, Charan
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...