×

8 கோடி ரூபாய் காரை வாங்கிய ராம் சரண்

ஐதராபாத்: கார் பிரியரான ராம் சரண், மார்க்கெட்டில் எந்த புது கார் வந்தாலும் வாங்கிவிடுவார். அடிக்கடி கார்களை மாற்றுவது இவரது வழக்கம். அந்த வகையில் இப்போது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரில் இவி மாடல் வாகனத்தை அவர் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.8 கோடியாகும். சமீபத்தில் ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு செல்ல ஏர்போர்ட்டுக்கு இந்த காரில்தான் ராம் சரண் வந்தார். அப்போதுதான் மீடியாவுக்கு இந்த தகவல் தெரியவந்தது. இந்த காரை வைத்திருக்கும் இரண்டாவது இந்தியர் ராம் சரண் என தெலுங்கு மீடியா தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது ராம் சரணிடம் இந்த காரை சேர்த்து 5 கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post 8 கோடி ரூபாய் காரை வாங்கிய ராம் சரண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ram Charan ,Hyderabad ,Rolls Royce ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராம் சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் பட ரிலீஸ் திடீர் மாற்றம்