×

அமைச்சரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் கடந்த 2ம் தேதி இரவு கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றபோது அவரது செல்போனை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்(21), அனிதா நகரை சேர்ந்த பாலா(21) ஆகியோர் அமைச்சரின் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு பைக் கொடுத்து உதவிய அவரது நண்பர்கள் 3 பேரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான செந்தில், பாலா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : persons ,minister ,Robbing , 3 persons , arrested , robbing cellphone
× RELATED கோவையில் கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது