×

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

சென்னை: நந்தனம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஸ்பா செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து, இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்க விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு, உதவி கமிஷனர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் போல் ஸ்பா நிலையத்தை நோட்டமிட்ட போது, வாலிபர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிடியாக ஸ்பா நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, பம்மல் பசும்பொன் நகர் தேவராஜ் தெருவை சேர்ந்த அம்மு (34) என்பவர், ஏழ்மையில் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தொழிலதிபர்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார், அம்முவை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழில் செய்ய பயன்படுத்திய பட்டதாரி இளம்பெண்கள் 4 பேர் மீட்கப்பட்டனர். வாடிக்கையாளர்களுக்கு இளம்பெண்கள் புகைப்படம் அனுப்பு பயன்படுத்திய 2 செல்போன்கள் மீட்கப்பட்டது.

The post நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nandanam ,Chennai ,Pasumphon Muthuramalinga Dewar Road ,Assistant Commissioner ,Rajalakshmi ,Adultery Prevention Division ,
× RELATED நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்...