×

ஸ்ட்ரெங்த் லிப்டிங் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டையில்  நடைபெற உள்ள ஸ்ட்ரெங்த் லிப்டிங் போட்டியில், மாவட்டவாரியாக பதிவு செய்ய தமிழ்நாடு ஸ்ட்ரெங்த் லிப்டிங் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராமன்  விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட சங்கம் சார்பில் மாநில அளவில் ஸ்ட்ரெங்த் லிப்டிங், இன்க்ளைன் பெஞ்ச் போட்டிவரும் 14, 15 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆண்களுக்கு 52, 60, 68, 76, 85, 95, 105, 115, 115+ கிலோ எடை  பிரிவுகளிலும், பெண்களுக்கு 46, 52, 58, 65, 72, 80, 80+ கிலோ எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடக்கும். இந்த போட்டியில் பங்கேற்க மாவட்ட வாரியாக வீரர், வீராங்கனைகள் பதிவு செய்ய வேண்டும். கட்டணம் 200. மேலும் விவரங்கள் அறியவும், பதிவு செய்யவும் அந்தந்த மாவட்ட ஸ்ட்ரெங்த் லிப்டிங் சங்க நிர்வாகிகளையோ, சென்னையில் உள்ள தலைமை சங்க நிர்வாகிகளையோ அணுகலாம்.



Tags : Strength Lifting
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...