×

கள்ளக்காதலியிடம் வீடியோ காலில் பேசியபடி தற்கொலை செய்த வாலிபர்: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே தனது கள்ளக்காதலியிடம் வீடியோகாலில் பேசியபடியே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் ஆலப்புழா  அருகே ஆலிசேரி பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரது  மகன் பாதுஷா (24). சங்கனாசேரியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் பணிபுரிந்து   வந்தார்.  பாதுஷாவுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணம்  முடிந்த  சில நாட்களிலேயே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரது  மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் பாதுஷா கடைக்கு அருகில்  உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த  நிலையில் சமீபத்தில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளனர். கடந்த சில தினங்களாக  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாதுஷா மனம்  உடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு பாதுஷா தனது கள்ளக்காதலிக்கு  வீடியோ  கால் செய்து பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது  தான் தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாக பாதுஷா கூறியுள்ளார். அதோடு  செல்போனை ஆனில் வைத்துக்கொண்டே  கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கில்  தொங்கினார். இதை பார்த்துக்கொண்டிருந்த அவரது கள்ளக்காதலி  அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வேலை செய்யும் பழக்கடை உரிமையாளருக்கு  தகவல் தெரிவித்தார். அவர் சங்கனாச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.   போலீசார் லாட்ஜுக்கு சென்றபோது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை  உடைத்து உள்ளே சென்றபோது பாதுஷா தூக்கில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை   மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : suicide ,Kerala , kallakkatali, Victim, suicide ,Kerala
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை