×

கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை

திருமலை: கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

நேற்று முன்தினம் ஒரேநாளில் 64,115 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 32,711 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி, சுமார் சிலாதோரணம் வரை 3 கிமீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் பக்தர்கள் 24 முதல் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

 

The post கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Swami ,Tirumala ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை...