×

அமெரிக்காவில் மதுபான ஆலையில் மர்மநபர் திடீர் துப்பாக்கிச்சூடு: குண்டு பாய்ந்து 6 பேர் உயிரிழப்பு...சுட்டவனும் சுட்டுக் கொலை!

வாஷிங்டன்: அமெரிக்காவின்  மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து, ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. மாசந்தூர் வளாகத்தில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அந்த விடுதியில் வழக்கம் போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் அங்கு திடீரென உள்ளே புகுந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மதுபான ஆலையில் கூடியிருந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டு தள்ளினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இந்த நிகழ்வில் பலர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

மேலும் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும், இ - மெயில் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கானோர்  பாதுகாப்பாக இருக்க ஒரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டி சென்று வேட்டையாடி வீழ்த்தினர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்ததுடன் ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,gunman , US, liquor mill, gunfire, 6 people killed
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...