×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடரும்: ஜவாஹிருல்லா பேட்டி

தாம்பரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் என்பிஆர் தொடங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாம்பரத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கிறிஸ்தவ, இந்து சமய பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சில கேள்விகளை மாற்றும்படி கடிதம் எழுதியிருப்பதாகவும் என்சிஆர் அசாம் போன்ற மாநிலத்திற்கு மட்டும்தான் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நீட் தேர்வு, 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசு எந்த மதிப்பும் கொடுக்காமல் இருந்ததோ, அதுபோல்தான் இந்த கடிதமும் குப்பையில் போடப்படும். கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, என்பிஆர் ஆகியவற்றை செயல்படுத்தமாட்டோம் என அறிவிப்பு வெளிவரும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Citizenship Amendment Act, Jawahirullah
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...