×

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோயில் தேர்த்திருவிழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் கலசம் வைத்தல் விழா நேற்று நடந்தது. சிவராத்திரியை யொட்டி வரும் 22ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 3 ம் தேதியன்று துவங்கியது. இதில் நேற்று தேர் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 வரும் 21ம் தேதியன்று பள்ளய பூஜையும், 22ம் தேதி காலை 3 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு தேர் நிலை பெயர்தல் நடைபெற உள்ளது. 23ம் தேரோட்டமும், 24ம் தேதி தேர் நிலை அடைகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவர், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Veerakumaraswamy Temple Theraku Festival Vellakoil Veerakumaraswamy Temple Therothu Festival , Vellakoil Veerakumaraswamy Temple Therothu Festival
× RELATED போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!!