×

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

நாமக்கல்: குமாரபாளையத்தில் உள்ள SBI ஏடிஎம்-ஐ கிரெட்டா காரில் வந்து நோட்டமிட்டதாகவும், ஒரு ஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க அவர்கள் வெறும் 15 நிமிடங்களே எடுத்துக் கொள்வதாகவும் கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி ஏடிஎம்-களை கண்டறிந்து, பல நாட்கள் நோட்டமிட்டு, பின்பு வெல்டிங் இயந்திரங்களை கொண்டு ATM மெஷின்களை அறுத்து பணத்தை திருடுவதே மேவாட் கொள்ளையர்களின் வழக்கமாக வைத்துள்ளனர் காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் அருகே சிக்கிய வடமாநில கொள்ளை கும்பல் 15 ஏடிஎம்களில் கொள்ளையடித்தது கண்டுபிடித்துள்ளனர். ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர். குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் 7 கொள்ளையர்களில் 2 பேர் விமானம் மூலம் சென்னை வந்ததுள்ளனர். சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சூர் சென்று காரில் தப்பிச் செல்ல முயன்றது அம்பலமானது.

கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற வட மாநிலக் கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர். சம்பவத்தின்போது போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காலில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர். போலீஸார் பிடியில் சிக்கிய 3 கொள்ளையர்களை வெப்படை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumarapaliam ,NAMAKKAL ,SBI ,KUMARAPALAYAI ,GRETA ,GOOGLE ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழப்பு