×

‘பப்ளிக் சர்வீஸ் கமிஷனா’, அல்லது ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷனா’ டிஎன்பிஎஸ்சி முறைகேடு உண்மைகள் முழுமையாக வெளிவர சிபிஐ விசாரணை: திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷனா’, அல்லது ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷனா’ என்று கேட்குமளவுக்கு நடைபெற்றுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிவர, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் இளைய அருணா இல்லத் மணவிழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்று சொல்லக்கூடாது. ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்’ என்றுதான் சொல்ல வேண்டும். புரோக்கர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

முறைகேடுகள் அமைச்சர்கள் வாயிலாக, முதலமைச்சரின் உத்தரவுடன் நடந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறோம். அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் ஒன்று விடாமல் மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். அதுமட்டுமல்ல; அதற்குரிய தண்டனையையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரியவர்களுக்குப் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

2 வார இடைவெளி கொடுக்க வேண்டும்
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:டிஆர்பி, டிஎன்பிஎஸ்சி மூலமாக வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் வட்டார கல்வி அலுவலர் தேர்வும், சுருக்கெழுத்தர் தேர்வும் நடக்கிறது. இதனால் இளைஞர்கள் இரு தேர்வில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இரண்டு தேர்வுக்கும் இரண்டு வார இடைவெளி கொடுத்து நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Public Service Commission ,Public Service Corp ,CBI ,TNPSC ,scandal , Public ,commission, CBI, TNPSC ,scandal
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்