×

விளையாட்டு துளிகள்

டோனி ரசிகன் நான்
இந்திய கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள எம்எஸ்கே பிரசாத், ‘எம்.எஸ்.டோனி இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அவரின் ரசிகன் நான். அதே நேரத்தில் அடுத்த தலைமுறைக்கான வீரர்களை கண்டறிவது அவசியம். அதுதான் தேர்வு குழுவின் வேலை ’என்று  கூறியுள்ளார்.

டேவிஸ் அணியில் பயஸ்
உலக கோப்பை டென்னிஸ் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியாக குரோஷியாவில் மார்ச் 6,7 தேதிகளில்  நடக்கிறது. குரோஷியாவை எதிர்த்து விளையாட உள்ள இந்திய  அணியில் பிரஜ்னேஷ், சுமீத், ராம்குமார் ராமநாதன்  ஆகியோருடன் மூத்த வீரர் லியாண்டர் பயசும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

கல்லூரி கிரிக்கெட்
சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி விளையாட்டுத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 6வது பவித்சிங் நய்யர் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப்போட்டியை அம்பாதி ராயுடு தொடங்கி வைத்தார்.


Tags : Dhoni , I am a fan of Dhoni
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...