×

ஆம்பூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை: பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம்

ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகள் மற்றும் ஆம்பூர் சுற்றுப்பகுதி கிராமங்களான தேவலாபுரம், துத்திப்பட்டு, கம்மகிருஷ்னபள்ளி, கரும்பூர், சின்னவரிகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் தற்போது நாய்கள் பெருகி வருகின்றன. ஆம்பூரில் வாத்திமனை, கஸ்பா, பணக்கார தெரு, வளையல்கார தெரு, கிருஷ்ணாபுரம், ரெட்டி தோப்பு, இந்திரா நகர், சாமியார் மடம், ஜவஹர்லால் நேரு நகர், சாணாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன.இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லவோ அல்லது இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக சென்றாலும் நாய்கள் விரட்டி வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடைகளுக்கோ அல்லது மாலை நேர வகுப்புகளுக்கு கூட செல்ல முடியவில்லை.

ஆம்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததில் மூதாட்டி, கர்ப்பிணி மற்றும் பள்ளி செல்லும் மாணவன் உட்பட பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பாக ஆம்பூர் வந்த கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் ஆம்பூரில் தொடர்ந்து நாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளனர். எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Ambur ,Ampur Area Dogs , Ampur, Dogs, Fear ,Public
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...