×

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் 49 புகாரில், 29 பயிற்சியாளருக்கு எதிரானது: பல சம்பவங்கள் மறைக்கப்படுவதாக புகார்

புதுடெல்லி: மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் செய்தி ஊடகத்தின் சார்பில் கேட்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விைளயாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவிகள், வீராங்கனைகள் ஆகியோர் பல்வேறு தளங்களிலும் பயிற்சியாளர் உள்ளிட்டோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் விவரங்களில்  புகார்களாக பதிவு செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஜூலை 2014ல் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் தங்களது பயிற்சியாளர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டினர். அந்த சிறுமிகளின் வயது 14-15 வரை இருந்தது. பயிற்சியாளரின் வயது 50. சிறுமிகளின் உடல் அளவீடுகளை எடுக்கும் சாக்குப்போக்கில் தகாத முறையில் அவர்களின் உடல்பாகங்களை தொட்டதாகவும், அவர்களின் மேற்சட்டையை கழற்றும்படி உத்தரவிட்டதாகவும், மற்றொரு சிறுமியை முத்தமிட முயன்றதாகவும் புகார் எழுந்தது. நீண்ட நாட்களுக்கு பின் சிறுமிகள் அளித்த புகாரின்படி, பயிற்சியாளருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இது நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு என்றாலும், பல புகார்களில் நடவடிக்கை இல்லை.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூரு, அவுரங்காபாத், காஷிப்பூர், கட்டாக், கோழிக்கோடு, போபால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள தேசிய பயிற்சி மையங்களில் பிற துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பாலியல்  துன்புறுத்தல் தொடர்பான 45 புகார்கள் பதிவாகி உள்ளன. அதில்,  பயிற்சியாளர்களுக்கு எதிராக 29 புகார்கள் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட குறைந்தது ஐந்து பயிற்சியாளர்களுக்கு ஊதியக் குறைப்புடன் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு பயிற்சியாளர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புகாருக்கு ஆளான 5 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, ஒரு மைனர் வீரர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து ஒரு பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முன்னாள் டைரக்டர் ஜெனரலான தாம்சன் கூறுைகயில், ‘‘பாலியல் புகார் தொடர்பாக கொஞ்சம் உண்மை இருக்கக்கூடும். ஆனால் சில புகார்களில் பொய் உள்ளது. 90 சதவீத வழக்குகளில், அவர்கள் புகார்களை வாபஸ் பெற்றுள்ளனர் அல்லது அறிக்கைகளை மாற்றியுள்ளனர். நாம் என்ன செய்ய முடியும்?” என்றார்.


Tags : sexual harassment ,sports heroes ,coach ,many ,incidents , Out , 49 complaints , sexual harassment ,heroes, 29 ,multiple incidents, covered
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...