×

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்-6 மாடல் அறிமுகம்

பிஎஸ்-6 விதி அமலுக்கு வருவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், அதற்கு இணையான மாசு உமிழ்வு தரமுடைய மாடல்களை அறிமுகம் செய்வதில் மஹிந்திரா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்-6 மாடல் கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதுவரை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள இப்புதிய கார், பிஎஸ்-6 இன்ஜின் தேர்வுகளில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலிலேயே பிஎஸ்-6 இன்ஜின் தேர்வில் வர இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, தற்போது வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிஎஸ்-6 டீசல் இன்ஜின் தேர்வுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் அடுத்த ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜினின் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது உள்ள 155 எச்பி பவரை வெளிப்படுத்தும் அதே செயல்திறனுடன் வர இருக்கிறது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது.

இப்புதிய டீசல் மாடலானது W5, W7, W9 மற்றும் W11 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், பிரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே வர இருக்கிறது. 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு கடந்த ஆண்டு மத்தியில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. எனவே, தொடர்ந்து டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இந்த பிஎஸ்-6 மாடலின் விலை கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. சோதனை ஓட்டத்தில் இருக்கும் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Introduction , xuv 500
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...