×

சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த 2018 ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு அளித்த இந்தத் தீா்ப்புக்கு எதிராக கேரளத்திலும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினா் தொடா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று, கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்குமென உத்தரவிட்டது. மேலும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு முன் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்கும். அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பானுமதி, அசோக், பூஷண், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த,மோகன் சந்தானகவுடர் ஆகியோர்  சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் பிடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Political Charter Session ,Judges ,Sabarimala , Political, Charter ,9 judges ,Sabarimala case
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...