×

சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ் வசதிக்காக சபரிமலையில் ரோப் கார் திட்டம்: ஆய்வு பணி தொடக்கம்

திருவனந்தபுரம்: சரக்குகளை கொண்டு செல்லவும், ஆபத்துக் காலங்களில் பக்தர்களை அழைத்து செல்லவும் சபரிமலையில் ரோப் கார் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரோப் கார் அமைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக ஒரு குழுவையும் உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவினர் நேற்று சபரிமலையில் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்கி உள்ளனர். 60 மீட்டர் உயரத்தில் 5 தூண்களுடன் இந்த ரோப் கார் அமைக்கப்படுகிறது. கேரள உயர்நீதிமன்றத்தின் வக்கீல்கள் ஆணையத்தை சேர்ந்த குரூப் என்பவரின் மேற்பார்வையில் கேரள சர்வே மற்றும் வனத்துறையை சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். வரும் 23ம் தேதி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ் வசதிக்காக சபரிமலையில் ரோப் கார் திட்டம்: ஆய்வு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : SABARIMALA ,Thiruvananthapuram ,Kerala High Court ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்