×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான டிவாவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உரி எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன.  காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம்  போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் உரி, ஹஜிபீர் பகுதிகளில் சிறிய ரக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் இன்று காலை முதல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான டிவாவில் நடந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (ஐ.எஸ்.பி.ஆர்) மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர், இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலால் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் Naib Subedar Kandero மற்றும் Sepoy Ehsan ஆவர் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : soldiers ,Pakistani ,attack ,Kashmir ,Diva ,Indian Army ,region , Jammu and Kashmir, Indian Army, Uri, attack, Pakistan, soldiers, occupation
× RELATED நாடாளுமன்ற கட்டிடம் 3,300 வீரர்கள் பாதுகாப்பு