×

துறைமுகங்களை தனியாருக்கு விற்று ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: நாட்டின் துறைமுகங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 2024-25-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 5-லிருந்து 7 துறைமுகங்கள் வரை தனியாருக்கு விற்க நிதி ஆயோக் குழுவுக்கு வரைவு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில துறைமுகங்களை தனியாருக்கு விற்க வரைவு அறிக்கையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ளது. துறைமுகங்களை செயல்படுத்துவதில் அரசுடன் தனியார் நிறுவனங்களையும் பங்கேற்கச் செய்ய ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

The post துறைமுகங்களை தனியாருக்கு விற்று ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Niti Aayog Committee ,Dinakaran ,
× RELATED பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான...