×

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து மருத்துவமனையின் உரிமையாளர் 2 பேருக்கு 3 நாள் நீதிமன்ற காவல்

டெல்லி: டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி உட்பட 2 பேருக்கு வரும் 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் (25.05.2024) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் குழு மற்றும் போலீஸ் டிசிபி ஷஹ்தரா சுரேந்திர சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் உரிமையாளர் நவின் கிச்சி என்பவரை டெல்லி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைதான மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி உட்பட 2 பேருக்கு வரும் 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து மருத்துவமனையின் உரிமையாளர் 2 பேருக்கு 3 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,hospital ,Naveen Kichi ,Pacchilam ,Dinakaran ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...