×

பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி

திருமலை: பாலத்தில் மோதி கார் நொறுங்கிய விபத்தில் 4 பக்தர்கள் பலியாயினர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர். எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய கார், சாலையின் நடுவில் உள்ள கால்வாய் சிறுபாலத்தில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அவர்களுடன் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரோந்து சென்ற போலீசார், அங்கு வந்து காரின் இடிபாட்டில் சிக்கிய சடலங்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை போராடி மீட்டனர். காயம் அடைந்த 2 பேரையும் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சந்திரகிரி போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர்கள் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

The post பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Indukurbet, Andhra state ,Nellore district ,Tirupathi ,Elumalayan ,temple ,Chittoor ,Varasiti Vinayagar Temple ,
× RELATED ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த...