×

ஹாலோவீன் திருவிழா

நன்றி குங்குமம் முத்தாரம்

மேற்கத்திய நாடுகளில் ஹாலோவீன் திருவிழா ரொம்பவே ஸ்பெஷல். மற்றவர்களைப் பயமுறுத்தும் வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வீதிகளில் உலா வருவது இத்திருவிழாவின் ஸ்பெஷல். குறிப்பாகக் குழந்தைகளுக்குப் போடப்படும் வேஷம் நம் குலையை நடுங்க வைக்கும்.  இதற்காகவே பிரத்யேக ஆடைகள், மேக்கப் சாதனங்கள் இருக்கின்றன. இவற்றின் விற்பனையும் சக்கைப்போடு போடும். ஆனால், பிலிப்பைன்ஸ் மக்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஹாலோவீன் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அக்டோபரின் இறுதியில் ஆரம்பித்த்து நவம்பரின் முதல் வாரம் வரை அங்கே இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆட்டம், பாட்டம், ஹாலோவீன் வேஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு நாளாகவும் ஹாலோவீன் திருவிழாவைக் கருதுகின்றனர் பிலிப்பைன்ஸ்காரர்கள். நவம்பர் 1 அல்லது 2-ம் தேதியில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தனக்கு நெருக்கமான நண்பர் மற்றும் இரத்த சொந்தத்தின் கல்லறைக்குத் தவறாமல் விசிட் அடித்து தனது கடமையைச் செய்வது பிலிப்பைன்ஸின் மக்களின் பண்பாடாகவே மாறிவிட்டது.


Tags : festival ,Halloween , Halloween, festival
× RELATED கோயில் திருவிழாவில் இரு...