×

ராசியில்லாத கட்டாக்கில் எடுபடுமா கோஹ்லி அட்டாக்?

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ரன் மெஷினாக விளங்கும் விராத் கோஹ்லிக்கு ராசியில்லாத மைதானம் என்றால் அது கட்டாக் பாரபட்டி ஸ்டேடியம் தான். இங்கு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20ல் விளையாடியுள்ள அவரது ஸ்கோர்  விவரம்... 3, 22, 1, 8 என படுமோசமாக அமைந்துள்ளது. அதாவது 4 இன்னிங்சில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய மைதானங்களிலேயே இது தான் அவரது மோசமான செயல்பாடாகும் (குறைந்தபட்சம் 3 போட்டிகள்). வெஸ்ட்  இண்டீசுடன் நடந்து வரும் தொடரில், சென்னை போட்டியில் 4 ரன் எடுத்த கோஹ்லி அடுத்து விசாகப்பட்டினத்தில் கோல்டன் டக் அவுட்டாகி உள்ளார். இந்த நிலையில், பாரபட்டி மைதானம் தனக்கு ராசியில்லாதது என்ற பழைய வரலாற்றை  மாற்றி அமைப்பதுடன் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் தனது முத்திரையை பதிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Kodi Attakkuttu ,Kohli Attack ,Kodai Attakkuttu Kodai Attack , International Cricket, Kohli, Cuttack Barabatti Stadium
× RELATED தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது